இந்த வல்லரசு நாடு தான் அடுத்த கொடிய தொற்றுநோய்க்கு காரணமாக இருக்கும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
அடுத்த பேரழிவை ஏற்படுத்தும் தொற்றுநோய் ஒன்று அமெரிக்காவில் இருந்து வியாபிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா மீது
உலகின் தொற்றுநோய் நிபுணர்கள் பலர் அடுத்த Disease X எதுவென ஒவ்வொரு மூலையையும் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் நிலையில், பலரது கவனம் தற்போது அமெரிக்கா மீது பதிந்துள்ளது.
அமெரிக்காவில் H5N1 பறவைக்காய்ச்சலானது மிக மோசமான வகையில் உருமாற்றம் கண்டுள்ளது. அத்துடன் மனிதர்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே H5N1 பறவைக்காய்ச்சலானது மிருகங்களை பாதித்து பின்னர் மனிதர்களுக்கு பரவும் என நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்து வந்துள்ளனர். தற்போது ஸ்பெயின் நாட்டின் நிபுணர்கள் இருவர் தெரிவிக்கையில்,
ஐரோப்பா மிகவும் சிறப்பாக
இதுவரை மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு H5N1 கிருமிகள் பரவியதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் அதன் சாத்தியம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த அழிவை ஏற்படுத்தும் பெருந்தொற்றானது அமெரிக்காவில் இருந்தே உருவாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் அப்படியான ஒரு நெருக்கடி ஏற்படும் என்றால், அது உடனடியாக உலக நாடுகளுக்கு தெரிவிக்கப்படும் என நுண்ணுயிரியல் துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கையில், அடுத்த பெருந்தொற்று தொடர்பில் உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க கடந்த 2020 ஐ விட ஐரோப்பா மிகவும் சிறப்பாக உள்ளது என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |