திருமணமாகாத நிலையிலும் நான் 100 குழந்தைகளுக்கு தந்தை - Telegram CEO, துரோவ்
டெலிகிராம் (Telegram) மெசஞ்சர் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பாவெல் துரோவ், திருமணமாகாத போதிலும் 100 குழந்தைக்கு தகப்பனாக உள்ளார்.
100 குழந்தைக்கு தகப்பனாகிய Telegram CEO
39 வயதான குறித்த தொழிலதிபர் திங்கள்கிழமை மாலை தனது பிரபலமான சேனல் மூலம் இதை தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, அவர் தனிமையில் இருக்க விரும்பினாலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது நண்பர் தனது விந்தணுவை தானம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் விளைவாக அவர் உலகம் முழுவதும் உள்ள 12 குடும்பங்களுக்கு குழந்தைகளைப் பெற உதவியுள்ளார்.
எனக்கு 100க்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகள் இருப்பதாக தன்னிடம் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நண்பர் ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் என்னை அணுகினார். கருவுறுதல் பிரச்சினை காரணமாக தனக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை பிறக்க முடியவில்லை என்றும் அவர்கள் குழந்தை பெறுவதற்காக ஒரு கிளினிக்கில் விந்தணு தானம் செய்யும்படி என்னிடம் கூறினார்.
மேலும் பல ஜோடிகளுக்கு அநாமதேயமாக உதவ அதிக விந்தணுக்களை தானம் செய்வது எனது குடிமைக் கடமை என்றும் கிளினிக்கின் முதலாளி என்னிடம் கூறினார். இது என்னை விந்தணு தானத்திற்கு பதிவு வலியுறுத்தியது.
எனது கடந்தகால நன்கொடை செயல்பாடு 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு குழந்தைகளைப் பெற உதவியுள்ளது.
மேலும், நான் நன்கொடை அளிப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பிறகும், குறைந்தபட்சம் ஒரு IVF கிளினிக்கில் இன்னும் குழந்தைகளைப் பெற விரும்பும் குடும்பங்களுக்கு எனது உறைந்த விந்தணுக்கள் உள்ளன.
அவர் தனது DNA பரிசோதனையை வெளியிடுவதாகவும் இதனால் அவரது உயிரியல் குழந்தைகள் அவரை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.”
உலகெங்கிலும் குழந்தைகளைப் பெற போராடும் குடும்பங்களுக்கு விந்தணு தானம் செய்ய ஆரோக்கியமான ஆண்களுக்கு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |