வரலாறு காணாத கனமழை: நிலச்சரிவில் சிக்கி சுமார் 90 பேர் உயிருடன் புதைந்து பலி!
இந்தோனேசியா மற்றும் East Timor-ல் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 87 பேர் உயிருடன் புதைந்து பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுவரும் நிலையில், மேலும் பலர் காணவில்லை என கூறப்படுகிறது.
இந்தோனேசியாவின் East Flores தீவு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள On Lembata, Langoday உள்ளிட்ட 7 சிறிய கிரம்மங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
அந்த கிராமங்களில் இதுவரை 66 பேர் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி பலியானதாக இந்தோனேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.
மேலும் காணாமல் போன பலரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தனி நாடான East Timor-ல் மேலும் 21 பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.
வெள்ளத்தில் வீடுகள், பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் உணவு, போர்வைகள் போன்ற அத்தியாவசிய அத்தேவைகள் இல்லமால் தவித்து வருகின்றனர்.
17,000 தீவுகளின் தொகுப்பான இந்தோனேசியாவில் மில்லியன் கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் அல்லது வளமான நீரால் சூழ்ந்த சமவெளிகளுக்கு அருகில் வாழ்கின்றனர்.
அதேபோல், 1.3 மில்லியன் மக்கள் தொகையே கொண்ட East Timor தீவு, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் உள்ள தனி நாடாகும்.
இந்தோனேசியா மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழை அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.


