வெளிநாடொன்றில் மலைபோல் குவிந்து கிடக்கும் சீனாவின் விற்காத மின்சார வாகனங்கள்
பிரபலமான சீன கார் நிறுவனம் ஒன்று அவுஸ்திரேலியாவில் விற்பனையாவதை விட அதிகமான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது தற்போது கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
BYD நிறுவனம்
குறித்த கார் நிறுவனமானது அல்பானீஸ் அரசாங்கத்தின் கொள்கையைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவே அதிக இறக்குமதி செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சீனாவின் பிரபலமான BYD நிறுவனமே தற்போது அவுஸ்திரேலியாவில், பயன்பாட்டில் இல்லாத கார் நிறுத்தும் பகுதிகளை தங்களின் விற்காத வாகனங்களை நிறுத்தும் வசதியாக மாற்றி வருகிறது.
கடந்த 12 மாதங்களில் மட்டும் BYD நிறுவனம் சுமார் 51,000 மின்சார வாகனங்களை அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் ஜம்பெரூ ஆக்ஷன் பார்க் பகுதியில் 1600 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
மெல்போர்னின் கிழக்கில் உள்ள கில்சித் பகுதியிலும் நூற்றுக்கணக்கான BYD வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரையில், கடந்த 12 மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 51,000 BYD வாகனங்களில் 38,000 மட்டுமே இதுவரை விற்பனையாகியுள்ளது.
டெஸ்லா, டொயோட்டா, ஃபோர்டு மற்றும் எம்ஜி போன்ற BYD நிறுவனத்தின் மின்சார வாகன போட்டியாளர்களின் இறக்குமதி மற்றும் விற்பனை புள்ளிவிவரங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

ஆனால், BYD நிறுவனத்தின் இறக்குமதி புள்ளிவிவரங்கள் அல்பானீஸ் அரசாங்கத்தின் புதிய வாகன திறன் தரநிலை திட்டத்தின் குறைபாடுகளை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்றே கூறுகின்றனர்.
அதாவது, கார் இறக்குமதியின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், விற்பனையை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
150 சதவீதம் அதிகரிப்பு
உண்மையில் அல்பானீஸ் அரசாங்கத்தின் இந்த திட்டம், கார் தயாரிப்பாளர்களை கடுமையான உமிழ்வு இலக்குகளை அடைய ஊக்குவித்துள்ளது. இலக்கை மீறும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு கிராம் கார்பனுக்கு 100 டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
இதன் காரணமாகவே மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், மின்சார வாகனங்களின் விற்பனையை கணக்கில் கொண்டு சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

BYD நிறுவனம் தெரிவிக்கையில், மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விற்பனையில் 150 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மின்சார வாகனங்களின் விற்பனை அவுஸ்திரேலியாவில் 12 சதவீதமாக இருந்தது. தற்போது அவுஸ்திரேலியாவில் 410,000 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |