பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்
பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் வித்தியாசமான வேலைகள் இடப்பெற்றுள்ளன.
பியானோ டியூனர், நாய்கள் அழகுபடுத்தும் நிபுணர், கன்னியாஸ்திரி (Nun) போன்ற வேலைகள் பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த விசா, வெளிநாட்டிலிருந்து திறமையான ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும்.
Skilled Worker Visa-ற்கு தகுதியான வேலைகள்
பிரித்தானியாவின் Visas and Immigration வெளியிட்ட eligible occupations பட்டியலில் 300க்கும் அதிகமான வேலைகள் உள்ளன.
பொதுவாக மருத்துவர், விஞ்ஞானி, பிளம்பர் போன்ற தொழில்கள் இதில் உள்ளன. ஆனால், animal care services, computer game tester, auctioneer, bee farmer, disc jockey (DJ) போன்ற எதிர்பாராத தொழில்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சில வித்தியாசமான தொழில்கள்
- ஹோமியோபதி மருத்துவர்
- விளையாட்டு ஆய்வாளர் (Broadcasting)
- கன்னியாஸ்திரி (Nun)
- கம்ப்யூட்டர் கேம் டெஸ்டர்
- டிஸ்க் ஜாக்கி (Disc Jockey)
- நாடக/ஆடல்கலை வடிவங்களில் உடை அணிந்து விளையாடுபவர் (Costumed Interpreter)
- ஏல விற்பனையாளர் (Auctioneer)
- தேன் பண்ணை தொழிலாளர் (Bee Farmer)
- கண்ணாடி ஊதுபவர் (Glass Blower)
- Piano tuner
- மர்ம வாடிக்கையாளர் (Mystery Shopper)
Skilled Worker விசாவிற்கு தகுதியானவை வேலைகள் முழு பட்டியலை இங்கே காணவும்.
சம்பள நிபந்தனைகள் & புதிய விதிமுறைகள்
- 2023 ஏப்ரல் மாதம் முதல், Skilled Worker Visa பெறுவதற்கு குறைந்தபட்ச சம்பளம் 38,700 பவுண்டுகளாக இருக்க வேண்டும்.
- 26 வயதுக்குட்பட்டவர்கள், கல்வியில் தொடர்ந்து இருப்பவர்கள், STEM PhD முடித்தவர்கள், அல்லது அறிவியல் மற்றும் உயர் கல்வி பிந்தைய ஆய்வு நிலைமைகளில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 30,960 பவுண்டுகள் சம்பளம் பெற வேண்டும்.
- அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது வேலைக்கான ஆதரவை (sponsorship) பிரித்தானிய நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும்.
பிரித்தானிய அரசின் நிலைப்பாடு
பிரித்தானிய அரசு வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சார்பினை குறைத்து, உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் immigration, skills and visa systems ஒன்றிணைந்த ஒரு Plan for Change அறிவிக்கவுள்ளது.
இந்த புதிய பட்டியல் மற்றும் விதிமுறைகள், வெளிநாட்டிலிருந்து பிரித்தானியாவிற்குள் வேலைக்காக வர நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Skilled Worker visa, UK Visas and Immigration, Homeopath, Games researcher, Nun, Computer games tester, Disc jockey, Auctioneer, Bee farmer, Glass blower, Piano tuner Mystery shopper, UK Skilled Worker visa jobs