திருமண பயோடேட்டாவில் பெண் கூறிய வித்தியாசமான நிபந்தனை: வைரலாகும் புகைப்படம்!
இணையத்தில் வெளியான சுவாரஸ்யமான திருமண சுயவிவர குறிப்பேட்டில்(Biodata) மணப்பெண் முன்வைத்துள்ள கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வைரலான திருமண சுயவிவர குறிப்பு
ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியை சேர்ந்த 26 வயது கிருத்திகா மீனா என்ற பெண்ணின் திருமண சுயவிவர குறிப்பேடு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
அதில் பெண்ணின் புகைப்படத்துடன், அவர் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், அவருக்கு தையல் மற்றும் நடனம் ஆகியவை பொழுதுபோக்கு என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தந்தை கடை வைத்துள்ளார் எனவும், தான் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மணப்பெண்ணின் வித்தியாசமான நிபந்தனைகள் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமண பெண்ணின் நிபந்தனைகள்
பொதுவாக திருமண நிச்சயங்கள் பார்க்கும் போது மணமகனின் பொருளாதார வசதிகள் முன்னுரிமையாக பார்க்கப்படும்.
ஆனால் கிருத்திகா வைத்த நிபந்தனையில், மணமகன் ஏழையாக இருந்தாலும், பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக எந்தவொரு போதைப் பழக்கம் இருக்க கூடாது, இனியும் பயன்படுத்த கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாதிக்கு முன்னுரிமை இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
இணையதள எதிர்வினைகள்
இந்த பயோடேட்டா உடனடியாக இணையத்தில் நூற்றுக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களின் நேர்மறையான விமர்சனங்களுடன் எதிர்மறையான விமர்சனங்களும் மணப்பெண்ணின் பயோடேட்டாவிற்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |