காதலன், கணவன் இருவருமே வேண்டும்! காவல் நிலையத்தில் அடம்பிடித்த மணப்பெண்
திருமணம் முடிந்த கையோடு காதலனையும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர் நடத்தி வைத்த திருமணம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இளம் பெண் தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரையும் திருமணம் செய்து கொள்கிறேன்
இந்நிலையில் வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்த கையோடு மணமகள், அருகிலுள்ள கிராமத்தில் உள்ள காதலனை கூட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் கோரிக்கையுடன் தஞ்சமடைந்துள்ளார்.
மணக் கோலத்தில் காவல் நிலையம் வந்த இளம் பெண், தன்னை காதலனுடன் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டார்.
காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் இளம்பெண்ணை சமாதானப்படுத்த முயன்ற நிலையில், தன்னை காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைக்குமாறு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"Do shaadi karenge Do Shaadi"
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) March 30, 2023
Woman demands marriage with lover soon after her wedding with a man
Police watches as mute spectators
Feeling so bad for her Husband
EQUALITY ! pic.twitter.com/S6zbiqE731
மேலும் நான் இருவரையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அந்த பெண் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கோபத்தில் அந்த பெண் கையில் இருந்த மொபைல் போனையும் கீழே போட்டு உடைத்தார்.
இறுதியில் அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பரத்குமார், அப்பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
காவல்நிலையத்திற்கு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகனும் வந்து இருந்த நிலையில், “ என் மனைவி அவருடைய காதலனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.