ஒரே நாளில் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பை முந்திய இந்திய விவசாயி அஜித்!
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் விவசாயி ஒருவர், உலக பணக்காரர் எலோன் மஸ்கின் வங்கி இருப்பை முந்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
எலோன் மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) உலகளவில் முதன்மையான பணக்காரராக இருக்கிறார்.
ஆனால் இவரது வங்கி இருப்பை, இந்திய மாநில விவசாயி அஜித் என்பவர் முந்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த அவரது வங்கிக்கணக்கில் 36 இலக்கங்களுடன் ரூ.1,00,13,56,00,,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்று பணத்தின் இருப்பு காட்டியுள்ளது.
முந்திய விவசாயி
இதன்மூலம் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பையே அஜித் முந்தியிருக்கிறார். அதாவது மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 389 பில்லியன் டொலர்கள் ஆகும். இது 14 இலக்கமாகும்.
ஆனால், அஜித்தின் வங்கிக் கணக்கில் 36 இலக்கங்களுடன் இருந்துள்ளது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கி கிளை கண்காணிக்கப்பட்டது.
அப்போதுதான் அது கணினி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று தெரிய வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |