சில மாதங்களில் திருமணம்... மாணவி எடுத்த தவறான முடிவு
இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துவரும் மாணவி ஒருவருக்கு சில மாதங்களில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட துயர சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
சில மாதங்களில் திருமணம்...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவாங்கி மிஷ்ரா (25) என்னும் இளம்பெண், பயோடெக்னாலஜி இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்துவந்துள்ளார்.
ஹாஸ்டலில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு மொபைலில் சத்தமாக யாரிடமோ வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது அறை அமைதியாக, சக மாணவிகள் அவரது அறைக்கதவைத் தட்டியுள்ளார்கள்.
ஷிவாங்கி கதவைத் திறக்காமல் இருக்கவே, அவர்கள் ஹாஸ்டல் வார்டனுக்கு தகவல் கொடுக்க, பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் ஷிவாங்கியின் அறைக்கதவை உடைத்துத் திறக்க, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதால் மன அழுத்தத்தில் இருந்த ஷிவாங்கி இந்த தவறான முடிவை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |