நண்பனின் உடல் தகனம் செய்யப்பட தீயில் குதித்து உயிர்விட்ட நபர்
இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நபர் ஒருவர் அவர் தகனம் செய்யப்பட அதே தீயில் குதித்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில், சனிக்கிழமையன்று, யமுனை ஆற்றின் கரையில் தனது நண்பரின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்த நபர் ஒருவர் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாக்லா கங்கர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அசோக் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக சிர்சாகஞ்ச் வட்ட அதிகாரி (சிஓ) பிரவீன் திவாரி தெரிவித்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் காலை 11 மணியளவில் யமுனைக் கரையில் நடைபெற்றன, அங்கு இருந்தவர்களில் அவரது நண்பர் ஆனந்த் (40) என்பவரும் இருந்தார்.
newstrack
மக்கள் தகனம் செய்யும் இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதும், ஆனந்த் திடீரென அசோக்கின் உடல் எரிந்துகொண்டிருக்கும் அதே தீயில் குதித்தார் என்று சிஓ கூறினார்.
அங்கு நின்றவர்கள் அவரை தீயிலிருந்து வெளியே இழுத்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கிருந்து அவர் ஆக்ரா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். ஆனால், ஆக்ரா செல்லும் வழியில் ஆனந்த் உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆனந்தின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரவீன் திவாரி கூறினார்.