திருடியதாக குற்றம் சாட்டி ஊழியர் இரும்பு கம்பியால் அடித்து கொலை: பதறவைக்கும் வீடியோ
உத்திர பிரதேச மாநிலத்தில் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடியதாக குற்றச்சாட்டு
உத்திர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஷிவம் ஜோஹ்ரி(33) என்பவர் தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்த நிலையில் அவரது நிறுவனத்தின் முதலாளி, தங்களது அலுவலகத்திலிருந்த துணிகளை திருடியதாக ஷிவம் ஜோஹ்ரி மீது சந்தேகப்பட்டுள்ளார்.
@gettyimages
இதனால் அந்த மேலாளரை அவரது முதலாளி நிறுவனத்தின் சக ஊழியர்களை அடித்து சித்திரவதை படுத்துமாறு கூறியுள்ளார்.
மின்சார ஷாக் கொடுத்து கொலை
இதனை தொடர்ந்து ஷிவம் ஜோஹ்ரியை ஒரு கம்பியில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். அவரால் கத்தக் கூட முடியாமல் சோர்ந்து போய் முணங்கி கொண்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
@twitter
மேலும் அவரை நீச்சல் குளத்தில் தூக்கிப் போட்டு விட்டு மின்சாரத்தை நீரில் பாய்ச்சியிருக்கிறார்கள். மின்சாரம் உடலில் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து ஷிவம் ஜோஹ்ரியின் தந்தை அளித்த புகாரின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஷிவம் ஜோஹ்ரியின் உடலை உடல்கூராய்விற்கு அனுப்பியுள்ளனர்.
மருத்துவமனையில் நடைபெற்ற உடல் கூராய்வில் அவர் பல வகையில் கொடுமையாக சித்திரவதை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஷிவம் ஜோஹ்ரியை கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.
அந்த வீடியோவின் மூலம் குற்றவாளிகள் யாரென உறுதி செய்து கொண்ட பொலிஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.