இணைய முடக்கத்தின் மறைவில்... ஈரானில் கொல்லப்பட்ட 16,500 அப்பாவி மக்கள்
ஈரானின் கொடூரமான ஆட்சி 16,500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைக் கொன்றிருக்கலாம் என அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
வெவ்வேறு தரவுகள்
அதே வேளையில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை விரக்தியடைந்த குடும்பங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அலி காமெனி நிர்வாகம் தங்களது நாடு தழுவிய இணைய முடக்கத்தை காலவரையின்றி நீட்டிக்க சதி செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது 5,000 பேர் கொல்லப்பட்டதாக ஒரு ஈரானிய அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால், அப்பாவி ஈரானியர்களைக் கொன்றதற்கு பயங்கரவாதிகளையும் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்களையும் ஒரு குழு குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், கலவரங்களின் போது 16,500 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதாகவும், 330,000 முதல் 360,000 பேர் வரை காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தாத வெவ்வேறு தரவுகள் கூறுகின்றன.
ட்ரம்பின் கிரீன்லாந்து கனவுக்கு எதிர்ப்பு... பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் கர்பிணிகளும் உள்ளடக்கம் என்றே கூறப்படுகிறது. மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும், இரத்த இழப்பு காரணமாக பலர் மரணமடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் சில மருத்துவப் பணியாளர்களை இரத்தம் தானம் செய்வதிலிருந்து தடுத்ததாகப் பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடூரமான நடவடிக்கை
இரத்தக்களரியான இந்த ஒடுக்குமுறையின் மத்தியில் 700 முதல் 1,000 பேர் வரை ஒரு கண்ணை இழந்துள்ளனர்; தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனை மட்டும் 7,000 கண் காயங்களைப் பதிவு செய்துள்ளது.
டிசம்பர் 28 அன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், திடீரென்று வன்முறையுடன் கூடிய போராட்டங்களாக வெடித்தது. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) பல ஆயிரம் பேரைக் கொன்றது என்பதை அலி காமெனி வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டார்.

இந்த படுகொலைகள், ஈரானின் இஸ்லாமிய ஆட்சி அதன் 47 ஆண்டுகால ஆட்சியில் போராட்டங்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகவும் கொடூரமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே, 10 நாட்கள் நீடித்த இணைய முடக்கத்தை ஈரான் நிர்வாகம் நீட்டிக்கத் திட்டமிடுகிறது என்ற அச்சங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் சுமார் 92 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |