கணவனை கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்: பொலிசாரிடம் பிள்ளைகள் கூறிய விடயம்
உத்தரப்பிரதேசத்தில் கணவனை மனைவி கொலை செய்யும் சம்பவம் ஒன்று மீண்டும் அரங்கேறியுள்ளது.
பொலிசாரிடம் பிள்ளைகள் கூறிய விடயம்
உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகர் என்னுமிடத்தில் சுரேஷ் குமார் (36) என்பவர் நேற்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை கொலை செய்த மனோஜ் குமார் (24) என்பவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.
உண்மையில், இந்த சம்பவம் நீண்ட நாட்களாக சுரேஷின் மனைவியான பீனா தேவி மற்றும் அவரது காதலர் என அழைக்கப்படும் மனோஜ் ஆகியோரால் (35) திட்டமிடப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், ’சார், அம்மாதான் அப்பாவைக் கொலை செய்யவைத்தது, அவரை சிறைக்கு அனுப்புங்கள்’ என பீனாவின் பிள்ளைகளே பொலிசாரிடம் கூறியுள்ளார்கள்.
மனோஜுக்கும் பீனாவுக்கும் நீண்டநாட்களாக தவறான உறவு இருந்துள்ளது. அது தொடர்பில் பலமுறை பொலிசாரிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது. என்றாலும், மனோஜை யாரும் தண்டிக்கவில்லை.
இந்நிலையில், மனோஜும் பீனாவும் சேர்ந்து சுரேஷைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
மனோஜ் ஒரு நாட்டுத்துப்பாக்கியை வாங்கிவந்து பீனாவிடம் கொடுத்துவைத்துள்ளார்.
சம்பவம் நடப்பதற்கு முந்தைய இரவு, வீட்டிலுள்ள அனைவருக்கும் உணவில் தூக்கமாத்திரைகளைக் கலந்து கொடுத்த பீனா, சுரேஷை கழுத்தை நெறித்துக்கொல்ல முயன்றுள்ளார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை.
ஆகவே, மனோஜுக்கு தகவல் கொடுத்துவிட்டு, சுரேஷிடம், இன்றைக்கு வேலைக்குப் போகவேண்டாம் என்று கூறியுள்ளார் பீனா.
மேலும், ஏதோ காரணம் கூறி ஏமாற்றி கணவனை வீட்டு வெளியே அவர் அழைத்து வர, சரியாக அங்கு வந்த மனோஜ், பீனா கொடுத்த துப்பாக்கியால் சுரேஷை சுட்டுக் கொன்றுவிட்டார்.
மனோஜும் பீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |