UPSC தலைவர் திடீரென ராஜினாமா? பயிற்சி IAS அதிகாரி பூஜாவின் சர்ச்சை தான் காரணமா?
மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (UPSC ) தலைவராக இருந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
UPSC தலைவர்
கடந்த 2017 -ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினராக மனோஜ் சோனி இணைந்தார். இதையடுத்து, 2023 -ம் ஆண்டில் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடன் சமர்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்படுமா என்பது தெரியவில்லை.
மோடியின் நெருக்கமான நண்பரான மனோஜ் சோனி, UPSC தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு குஜராத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றினார்.
2005 முதல் 2008 வரை காராஜா சாயஜிராவ் பல்கலைக்கழகத்திலும், 2009 முதல் 2015 வரை பாபாசாஹேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா விவகாரத்துக்கும், மனோஜ் சோனி ராஜினாமாவுக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.
இவருக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்நிலையில் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் ஆன்மிக சேவையாற்ற விருபுவதால் தனது UPSC தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |