ரகசியமாக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா..கொந்தளித்த ஆப்பிரிக்க நாடு
ரஷ்யாவிற்கு ரகசியமாக ஆயுதங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதற்கு, தென் ஆப்பிரிக்கா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆயுதங்கள் ஏற்றமதி
அமெரிக்க தூதர் ரூபன் பிரிஜிடி வியாழக்கிழமையன்று, கேப்டவுன் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்ட ரஷ்ய சரக்குக் கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டதாக வாஷிங்டன் நம்புவதாக கூறினார்.
அவரது இந்த கருத்து தென் ஆப்பிரிக்க ஜனாதிபதிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்காத நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி இந்த விடயத்தில் விசாரணை நடத்துவார் என்று கூறியுள்ளார்.
Reuters
எனினும் சமீபத்திய விசாரணைக்கான காலக்கெடு வெளியிடப்படவில்லை. யார் அதை வழிநடத்துவார்கள் என்பது குறித்து உடனடி அறிவிப்பு எதுவும் இல்லை.
அமைச்சர் நம்பிக்கை
இந்த நிலையில் ஜனாதிபதி அலுவலக அமைச்சர் Khumbudzo Ntshavheni இதுகுறித்து கூறுகையில், 'தென் ஆப்பிரிக்காவை அமெரிக்காவில் பலவீனப்படுத்த முடியாது, எங்களுக்கு ஏற்ற காலக்கெடுவை பின்பற்றுவோம்' என உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஒருவேளை அமெரிக்கா கூறியது உறுதி செய்யப்பட்டால், உக்ரைனில் உள்ள மோதலில் தென் ஆப்பிரிக்காவின் நடுநிலைமையை வெளிப்படுத்தியதில் இருந்து இந்த ஏற்றுமதி ஒரு முறிவைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், கிரெம்ளின் கூறுகையில் புடின் மற்றும் ரமபோசா தொலைபேசி அழைப்பில் ''பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை மேலும் தீவிரப்படுத்த தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தினர்'' என தெரிவித்துள்ளது.
Sergei Chirikov/Pool photo via AP Photo
Nic Bothma/EPA, via Shutterstock