சீரியா மீதான துருக்கியின் ராணுவ நடவடிக்கை: அமெரிக்கா கண்டனம்!
சிரியா மீதான துருக்கியின் ராணுவ நடவடிக்கைகளை வலுவாக எதிர்ப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
சீரியாவில் இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர் நிறுத்ததை உடைத்து எறிந்து, துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் சுத்தம் செய்யபோவதாக அறிவித்து குர்திஷ் ஆயுதக் குழுக்கள் மீது கடந்த வாரம் புதிய ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
இந்தநிலையில், புதன்கிழமை நோட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்குடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சீரியா மீதான துருக்கியின் ராணுவ நடவடிக்கையை இந்த கூட்டமைப்பு வலுவாக எதிர்கிறது, அத்துடன் இந்த தாக்குதலானது பிராந்திய நிலைத்தன்மையை குலைக்கிறது எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் துருக்கியின் இந்த தாக்குதலானது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் கூட்டமைப்பின் தொடர் முயற்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உணவு பற்றாக்குறையை தீர்க்க உக்ரைன் ரஷ்யா இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை: அன்டோனியோ குட்டரெஸ் கருத்து
குர்திஷ் ஆயுதக் குழுக்களை ஸ்வீடனில் இயங்கி வருவதாக மேற்கோள் காட்டித்தான் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணைவதை துருக்கி எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.