உக்ரைனுக்காக அமெரிக்கா இதுவரை செலவிட்டுள்ள மொத்த இராணுவ உதவி: அம்பலமான உண்மை
ரஷ்யாவின் பிப்ரவரி 2022 படையெடுப்பை அடுத்து உக்ரைனுக்கு இதுவரை 65.9 பில்லியன் டொலர் இராணுவ ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இராணுவ உதவிகள்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று உக்ரைனுக்கான உதவியை இடைநிறுத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நெருக்கடி அதிகரித்துள்ளது.
உக்ரைனுக்கான உதவிகளுக்கு ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்ததுடன், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு தொடரும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், உக்ரைன் போர் தொடர்பில் அவரது நகர்வுகள் அனைத்தும் அதிர்ச்சியளிக்கும் வகையில் மாற்றம் கண்டது. அத்துடன் ரஷ்யா மீது அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜனவரி 20ம் திகதி அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இதுவரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியுள்ள இராணுவ உதவிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இடைவிடாத உக்கிரத் தாக்குதல்களை அடுத்து வான் பாதுகாப்பு அம்சங்கள், மூன்று பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகள் வழங்கின. ஐரோப்பிய கூட்டணியும் இதுபோன்ற அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
மேலும், NASAMS 12 எண்ணிக்கையும், HAWK அமைப்பும், 3,000க்கும் மேற்பட்ட ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அமெரிக்கா வழங்கியுள்ளது. அத்துடன் 21 வான் கண்காணிப்பு ரேடார்கள் வழங்கப்பட்டன, 155mm howitzers மொத்தம் 200 எண்ணிக்கையும் மூன்று மில்லியன் தொடர்புடைய பீரங்கி குண்டுகளும் வழங்கியுள்ளது.
புதிதாக எந்த உதவிகளும்
இதேப் போன்று 105mm howitzers மொத்தம் 72 எண்ணிக்கையும் ஒரு மில்லியன் தொடர்புடைய குண்டுகளும் வழங்கியுள்ளது. 40க்கும் மேற்பட்ட HIMARS, 120,000 க்கும் மேற்பட்ட பிற வாகன எதிர்ப்பு ஆயுதங்களும், 10,000 TOW டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்கப்பட்டன.
சிறிய ஆயுதங்களுக்காக, 500 மில்லியனுக்கும் அதிகமான சிறிய ஆயுத வெடிமருந்துகள் மற்றும் கையெறி குண்டுகள் உக்ரேனிய வீரர்களுக்கு வழங்கப்பட்டன. இருப்பினும் பென்டகன் இதுவரை தனது போர் விமானத்தை நேரடியாக உக்ரைனுக்கு அனுப்ப மறுத்துவிட்டது.
பைடன் நிர்வாகம் சோவியத் வடிவமைத்த Mi-17 இராணுவ ஹெலிகொப்டர்களில் 20 எண்ணிக்கையை வழங்கியது. கடும் இழுபறிக்கு பின்னர் அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட கனரக டாங்கிகள் என அறியப்படும் 31 Abrams டாங்கிகள், மற்றும் சோவியத் வடிவமைத்த 45 T-72B டாங்கிகளும் வழங்கியது.
வெளிவிவகாரத் துறை பட்டியலில் 300 பிராட்லி போர் வாகனங்கள், 1,300 கவசப் பணியாளர்கள் கேரியர்கள், 5,000 க்கும் மேற்பட்ட ஹம்வீ இராணுவ வாகனங்கள் மற்றும் 300 கவச ஆம்புலன்ஸ்கள் உள்ளன.
ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதிதாக எந்த உதவிகளும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்த உதவிகளை மட்டும் விநியோகம் செய்துள்ளது.
இந்த ஆயுதங்களின் மொத்த மதிப்பு 65.9 பில்லியன் டொலர் என்றே அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |