தைவான் கடலில் அமெரிக்கா-பிரித்தானியாவின் போர் கப்பல்கள்: சீனா கடும் எச்சரிக்கை
தைவான் கடல் பிராந்தியத்திற்குள் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர் கப்பல்கள் நுழைந்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா கண்டனம்
தைவானை சீனாவில் இருந்து பிரிக்கும் 110 மைல் தூரம் கொண்ட கடல் பரப்பு வழியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த USS Higgins மற்றும் HMS Richmond ஆகிய இரண்டு போர் கப்பல்களும் கடந்து சென்றுள்ளது.
China has deployed naval and air forces to monitor the USS Higgins and HMS Richmond as they sail through the Taiwan Strait—a move Beijing claims provokes instability in a region simmering with military tensions and territorial disputes. pic.twitter.com/sHv8QEELbD
— unumihai Media (@unumihaimedia) September 12, 2025
இந்நிலையில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர் கப்பல்களின் செயல்களுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்ததுடன், இதனை பிராந்தியத்தில் பிரச்சினை தூண்டும் மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு தியேட்டர் கமாண்ட், அத்துமீறிய இரண்டு கப்பல்களையும் தங்கள் போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் விடாமல் கண்காணித்து எச்சரிக்கை தெரிவித்ததாக உறுதிப்படுத்தியுள்ளது.
சீனா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இந்த செயல் தவறான தகவல்களை அனுப்புவதாகவும், இவை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தைவான் இறையாண்மை தொடர்பான சீனாவின் இராஜதந்திர மோதலையும், சர்வதேச நாடுகளின் தலையீடுகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |