இந்தியாவிற்கு ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவிற்கு 131 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றநிலையில், இந்திய ராணுவத்திற்கு முக்கிய முன்னேற்றமாக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ராணுவ உபகரணங்கள் மற்றும் லாஜிஸ்டிக் ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல், இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுப்பெறும் போர்துறை கூட்டுறவின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (DSCA) இந்த விற்பனையை அமெரிக்க காங்கிரஸுக்கு அறிவித்துள்ளது.
இந்த ஒப்புதல், இந்தியா-அமெரிக்கா இடையிலான Indo-Pacific Maritime Domain Awareness (பசிபிக்-இந்தோ கடல் கண்காணிப்பு) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதில் Sea-Vision Software, Remote Software, Analytical Support மற்றும் பற்பல நவீன உபகரணங்கள் அடங்கும்.
இந்த உபகரணங்கள் இந்தியாவின் கடல் பாதுகாப்பு, பகுப்பாய்வு திறன் மற்றும் மூலோபாய நிலைப்பாட்டை மேம்படுத்தும்.
இந்திய ராணுவம் இவை அனைத்தையும் எளிதாக ஏற்று பயன்படுத்தும் திறன் கொண்டது என அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை துருக்கி நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானில் துருக்கிய விமானம் கீழிறங்கியதற்குக் காரணம் 'எரிபொருள் நிரப்புதல் மட்டுமே' என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US India military deal, India defense news, Indo-Pacific strategy, $131 million defense sale, India maritime security, Pentagon DSCA India, Sea Vision software India, India US strategic ties, Pahalgam attack aftermath, Turkey Pakistan arms denial