அமெரிக்காவில் வீட்டின் பிரிட்ஜில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி: உரிமையாளர் அதிரடி கைது
அமெரிக்காவில் வீடு ஒன்றின் பிரிட்ஜில் இருந்து 5 உயிரிழந்த நாய்களின் உடல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்ஜில் இருந்த நாய்களின் உடல்
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர்.
Maricopa County Sheriff's Office
அப்போது அந்த வீட்டில் இருந்த பிரிட்ஜுக்குள் 5 உயிரிழந்த நாய்களின் உடல் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின் உயிரிழந்த நாய்களின் உடல்களை பிரிட்ஜில் வைத்து இருந்த வீட்டின் உரிமையாளர் மெக்லாலினை (48) பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மோசமான நிலையில் 50 நாய்கள்
அத்துடன் அதே வீட்டில் மேலும் 50 நாய்கள் மோசமான உடல் நிலையுடன் இருப்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
iStock
இதையடுத்து அவற்றை உடனடியாக மீட்டு விலங்குகள் நல காப்பகத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |