அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டர் விபத்து: வாஷிங்டனில் பரபரப்பு
வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
வியாழக்கிழமை இரவு அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான MH-60 Black Hawk ஹெலிகாப்டர் ஒன்று lewis-McChord கூட்டு தளத்தில் விபத்துக்குள்ளானது.
இரவு 9 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விபத்தின் போது ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
ஹெலிகாப்டர் ஆனது டகோமாவுக்கு தெற்கே 10 மைல் தூரத்தில் உள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், இவை அமெரிக்க இராணுவ கூட்டு தள தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |