ஹோர்முஸ் நீரிணை அருகே நொறுங்கிய ஹெலிகொப்டரில் இருவர் மீட்பு: உறுதிப்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகொப்டர் ஒன்று, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே விபத்திற்குள்ளானதில் இருவர் உயிர்தப்பினர்.
முழு அளவிலான போரில்
மத்திய கிழக்கில் மீண்டும் தொடங்கியுள்ள மோதல்கள், ஒரு முழு அளவிலான போரில் மூழ்கிவிடக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளன.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் மீண்டும் தாக்குதலில் இறங்கியது.
இந்த சூழலில் ஜெஃப்டா கிராமத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், சிரியக் குழந்தை உட்பட ஏழு பேர் திங்களன்று கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்திய ட்ரம்ப்
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானது.
எனினும், அதில் இருந்த இரு பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த ஹெலிகொப்டர், ஈரானின் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு அல்லது வேறு ஏதேனும் சிக்கல் காரணமாக விபத்திற்குள்ளானதா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் மீட்கப்பட்டனர்; இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |