குறிவைக்கப்பட்ட 140 ஈரானிய இலக்குகள்: அமெரிக்கா நடத்திய பிரம்மாண்ட தாக்குதல்
கிட்டத்தட்ட 140 ஈரானிய இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிவைக்கப்பட்ட 140 ஈரானிய இலக்குகள்
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்கா - ஈரான் இடையே புதிய தாக்குதல்கள் தொடங்கியுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட தகவலின் படி, அமெரிக்க ராணுவம் முன்னெடுத்த மூன்றாவது சுற்று தாக்குதலில் 140 ஈரானிய இலக்குகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் கடற்படைக் கப்பல்கள், தரைப்படை தளங்கள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியமான ஏவுகணை தாக்குதல்களை பயன்படுத்தி ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை சிதைப்பதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதைக்கப்பட்ட முக்கிய இலக்குகள்
ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள், வெடிபொருள் கிடங்குகள், விநியோக மையங்கள், கடல்சார் செயல்பாடுகள் மற்றும் கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் ஆளில்லா விமான கிடங்குகள் ஆகியவை சிதைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரானின் முக்கிய தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் அமைப்பும் இந்த தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |