நகரும் லாஞ்சர்களில் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள்: அமெரிக்க ராணுவத்தின் புதிய திட்டம்
ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை நகரும் லாஞ்சர்களில் பொறுத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் புதிய திட்டம்
அமெரிக்க ராணுவம் தங்கள் படைகளுக்கு ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை நகரும் லாஞ்சர்களில் பயன்படுத்துவதற்காக மாற்றி அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் காஸ்டெலியன்(Castelion) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், காஸ்டெலியன் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை அமெரிக்க ராணுவ அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து நிறுத்த முடியாததாக கருதப்படும் இவை, அமெரிக்க ராணுவ ஆயுதங்களை தந்திரோபாய முறையில் உலகெங்கிலும் நிலைநிறுத்துவதற்கான முக்கிய படிநிலையாக பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில், HIMARS செயல்பாட்டு தளங்களில் காஸ்டெலியன் நிறுவனம் தங்களது பிளாக்பியர்ட்(Castelion Blackbeard) அமைப்பை ஒருங்கிணைக்கும்.
இது ,அதிவேக ஆயுதங்களை நிலைப்படுத்துவதில் உள்ள நெகிழ்வு தன்மையையும், தந்திரோபாய வரம்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |