1000 ராணுவ வீரர்களின் எச்சங்களை தேடும் அமெரிக்கா: அசாம் அரசிடம் உதவி கேட்டு கோரிக்கை
அசாமில் உயிரிழந்த 1,000 ராணுவ வீரர்களின் எச்சங்களை அமெரிக்கா இப்போது தேடிவருகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது அசாமில் உயிரிழந்த 1000 ராணுவ வீரர்களின் எச்சங்களை கண்டுபிடிக்க, அசாம் அரசின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதர் மெலிண்டா பாவெக் (Melinda Pavek), அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவுடன் (Himanta Biswa Sarma) நடத்திய சந்திப்பின் போது இந்த கோரிக்கை எழுப்பப்பட்டது.
@CMOfficeAssam
இதையடுத்து, அரசால் இயன்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் மூலம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வசர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.
Mrs Melinda Pavek, the Consul General of the United States Consulate at Kolkata called upon HCM Dr @himantabiswa at Dispur today.
— Chief Minister Assam (@CMOfficeAssam) June 8, 2023
HCM underlined the close ties between India & the United States and stressed on Assam’s growing economic potential for American investment. pic.twitter.com/cFxb1wNmfb
இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவில் காணாமல் போன அமெரிக்க வீரர்களின் எச்சங்களைத் தேட அமெரிக்கா 5 பயணங்களை நடத்தியது.
ஜப்பானுக்கு எதிரான போரில் சீனாவுக்கு உதவுவதற்காக இந்தியாவில் உள்ள தளங்களில் இருந்து இமயமலைக்கு மேல் பறக்கும் போது காணாமல் போன அமெரிக்க வீரர்களின் எச்சங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 விமானிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.