ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்துங்கள்: சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரித்துள்ளார்.
உக்ரைனின் மீது ரஷ்யா சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் பலவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவின் போக்கு ரஷ்யாவின் பக்கம் சாய்ந்து வருவதை அமெரிக்கா மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் எச்சரித்து வந்ததை தொடர்ந்து, ரஷ்யாவிற்கு சீனா ஏதேனும் உதவிகளை செய்தால், அவர்கள் மீது புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை தடைகள் அமெரிக்கா முன்னெடுக்கும் என எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்க வணிக நிறுவனங்கள் ரஷ்யா மீது விதித்துள்ள வர்த்தக தடைகளை மீறி ரஷ்யாவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க உபகரணங்கள் மற்றும் மென்பொருளின் உதவிகளில் இருந்து துண்டிக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ கடந்த வாரம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும் சீனாவுடன் நாங்கள் நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதாகவும், இருப்பினும் ரஷ்யாவிற்கு சீனா ஏதேனும் உதவிகள் செய்ய முன்வந்தால் அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
சீனாவின் முன்னணி ராஜதந்திரியான யாங் ஜீச்சியை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் சந்தித்து பேசவுள்ள நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ராணுவ டாங்கிகளை தகர்த்தெறிந்த உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்!