போதைப்பொருள் கடத்தல் படகுகளை தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா: ஒரே வாரத்தில் 3 வது தாக்குதல்
கிழக்கு பசிபிக் கடற்கரையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகுகள் மீது மீண்டும் ஒரு முறை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
வியாழக்கிழமை கிழக்கு பசிபிக் கடற்கரையில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை கடத்தி சென்ற இரண்டு படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடல்வழி கடத்தல்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தீவிரமாக நடத்தி வரும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது என விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத்-தின் நேரடி உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான படகில் இருந்தவர்கள் சட்டவிரோதமான மற்றும் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று அமெரிக்க அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள்

அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில், முதல் படகில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாவது படகில் இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது அமெரிக்கா ஒரே வாரத்தில் நடத்தும் 3வது தாக்குதல் இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |