போதைப்பொருள் கடத்திய படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
US Attacks on Drug Smuggling Boat 4 Dead: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல்
வெனிசுலா, மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப் பொருளானது கடத்தப்பட்டு வருகிறது.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த உத்தரவின் பேரில் அமெரிக்க கடற்படை இராணுவத்தினர் பசிபிக் மற்றும் கரீபியன் ஆகிய கடல் வழியாக போதைப் பொருள் கடத்தும் படகுகள் மீது தீவிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பலர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் பலி
இந்நிலையில் நேற்று கரீபியன் கடல் வழியாக சிறிய படகில் போதை பொருள் கடத்தி வந்த கும்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படகில் இருந்த 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக இதுவரை 69 தாக்குதல்களை அமெரிக்கா ராணுவம் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 231 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.