அமெரிக்க ஆதரவு மனிதாபிமான நிறுவனம்: காசாவில் செயல்பாடு நிறுத்தம்
அமெரிக்க ஆதரவு பெற்ற உதவி நிறுவனம் தங்களது செயல்பாடுகளை காசாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
காசாவில் உதவி நிறுவனம் மூடல்
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் 6 வாரங்களுக்கு மேல் அமுலில் உள்ளது.

இந்நிலையில் போர் காலகட்டத்தில் காசாவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவி நிறுவனங்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படை மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வந்தன.
இந்த உதவி நிறுவனங்களில் காசா மனிதாபிமான பவுண்டேசன் நிறுவனமும் ஒன்று ஆகும்.

இந்த “காசா மனிதாபிமான பவுண்டேசன் நிறுவனம்” அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் என்று சர்ச்சைகள் எழுந்தன.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து பல்வேறு உதவி நிறுவனங்கள் தங்கள் விநியோக மையங்களை மூடின. இதில் “காசா மனிதாபிமான பவுண்டேசன் நிறுவனம்” ஒன்றாகும்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், காசா மக்களுக்கு உதவி வழங்குவதற்கு சிறந்த வழி உள்ளது என்பதை காட்டும் பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |