H-1B விசா திட்டத்தை இடைநிறத்த திட்டம்., இந்தியர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு
அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், H-1B விசா திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தும் மசோதாவை முன்வைத்துள்ளனர்.
End H-1B Visa Abuse Act of 2026 எனப்படும் இந்த மசோதா, இந்திய தொழில்நுட்ப மற்றும் சுகாதாரத் துறையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வருடாந்திர H-1B விசா எண்ணிக்கையை 65,000-இல் இருந்து 25,000-ஆக குறைக்க, குறைந்தபட்ச சம்பளத்தை 200,000 டொலராக நிர்ணயிக்க, குடும்ப உறுப்பினர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதற்கு தடைவிதிக்க உள்ளிட்ட பல மாற்றங்களை இந்த மசோதா முன்வைக்கிறது.
மேலும், லொட்டரி முறையை நீக்கி, சம்பள அடிப்படையிலான தெரிவு முறையை அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது.

இந்தியர்கள் H-1B விசா பெறுபவர்களில் மிகப்பெரிய குழுவாக இருப்பதால், இந்த மாற்றங்கள் அவர்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.
குறிப்பாக, வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இந்தியர்கள், நிலை மாற்றம் செய்ய முடியாமல் சிக்கலில் சிக்கக்கூடும்.
காங்கிரஸ் சட்டப்படி H-1B திட்டத்தை நிறுத்த முடியும் என அமெரிக்க குடியேற்ற சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இது நடைமுறைக்கு வந்தால், பல இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#H1BVisa #USCongress #ImmigrationNews #IndianProfessionals #VisaReform #TechJobs #USImmigration