புகார் அளித்த பெண்ணை சுட்டுக் கொன்ற பொலிஸார்: குற்றச்சாட்டை மறுக்கும் 9வயது மகள்
அமெரிக்காவில் குடும்ப வன்முறை காரணமாக 911 அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்ட பெண் இறுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவசர அழைப்பை தொடர்பு கொண்ட பெண்
கடந்த டிசம்பர் 4ம் திகதி மாலை அமெரிக்காவின் லான்காஸ்டரில் உள்ள கிழக்கு அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 27 வயது நியானி ஃபின்லேசன்(Niani Finlayson) என்ற பெண் குடும்ப வன்முறை தொடர்பாக அவசர அழைப்பான 911க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தன்னுடைய ஆண் நண்பர் வீட்டை விட்டு வெளியேற மறுத்து தொந்தரவு தருவதாக நியானி ஃபின்லேசன் அளித்த புகாரை கேட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரீப் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
X
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், புகார் அளித்த நியானி பின்லேசன் தன்னுடைய கையில் சமையலறை கத்தியுடன் நின்று கொண்டு இருந்ததுடன், தன்னுடைய 9 வயது மகளை தள்ளும் ஆண் நண்பரை குத்தப்போவதாக தெரிவித்து அந்த குடியிருப்பில் ஆண் நண்பர் இருக்கும் அறைக்கு பொலிஸாரை அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 911 அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்ட பெண் நியானி பின்லேசன் தன் மகளின் கண்முன்னே பொலிஸாரின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சரிந்தார்.
ஆனால் உடனடியாக சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
Niani Finlayson. PHOTO: GO FUND ME
பொலிஸார் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நியானி பின்லேசன் குடும்பத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதே சமயம் நியானி தங்களை பயமுறுத்தியதாக பொலிஸார் முன்வைக்கும் குற்றச்சாட்டை நேரடி சாட்சியான நியானி பின்லேசனின் 9 வயது மகள் மறுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |