ஈரானை முற்றுகையிடும் அமெரிக்கா: கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை
ஈரானிய துறைமுகங்களை முடக்க போவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
ஈரானிய துறைமுகங்களை முடக்கும் அமெரிக்கா
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானிய துறைமுகங்களை திங்கட்கிழமை முதல் முடக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு கட்டணம் செலுத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்யும் அனைத்து கப்பல்களையும் இடைமறிக்க அமெரிக்க படைகளுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து 100 டொலர்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளது.
உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
மேற்கு டெக்சாஸ் இடைநிலை(WTI) விலை 8% வரை உயர்ந்து கச்சா எண்ணெய் பேரல் விலை $104.24 ஆக விற்பனையாகியுள்ளது.

அதே நேரத்தில் ப்ரெண்ட்(Brent) விலை 7% வரை உயர்ந்து கச்சா எண்ணெய் பேரல் விலை $102.29 ஆக விற்பனையாகியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு முன்னதாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 70 டொலர்கள் என்ற அளவிலும், ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை 119 டொலரை தொட்டது, ஆனால் பேச்சுவார்த்தை மற்றும் தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் விலை $95.20 டொலராக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |