கார்க் தீவில் எண்ணெய் கிணறுகள் மூடப்படும் அபாயம்., ஈரானை பணியவைக்க அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island விரைவில் நிரம்பப்போகிறது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உலகின் 90 சதவீத ஈரான் எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் இந்த தீவு, பாரசீக வளைகுடாவில் மிக முக்கியமான இடமாகும்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.
ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், அமெரிக்கா தனது கடற்படையின் மூலம் ஈரானின் துறைமுகங்களை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் ஈரானின் எண்ணெய் வருவாய் பாதிக்கப்படும் நிலையில், Kharg Island சேமிப்பு சில நாட்களில் நிரம்பி, எண்ணெய் கிணறுகள் மூடப்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்சன்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் தற்காலிக போர்நிறுத்ததை தற்போது நீட்டித்துள்ளார். இருப்பினும், கடற்படை முற்றுகை தொடரும் என அறிவித்துள்ளார்.
“ஈரான் அரசு உடைந்த நிலையில் உள்ளது. அவர்கள் ஒருமித்த முடிவை எடுக்கும் வரை முற்றுகை தொடரும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “கடற்கொள்ளைச் செயல்” எனக் கண்டனம் தெரிவித்து, ஹார்முஸ் நீரினியை தானும் மறித்து வருகிறது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த நீரிணை மூடப்பட்டதால், சர்வதேச சந்தையில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
அமெரிக்கா, ஈரானின் நிதி ஆதாரங்களை முற்றிலும் தகர்க்கும் வகையில் பொருளாதார தடைகளை அதிகரித்து வருகிறது. இதனால் ஈரானின் எதிர்காலம் மிகுந்த சவால்களை சந்திக்கவுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranCrisis #USBlockade #HormuzStrait #KhargIsland #OilWar #DonaldTrump #PersianGulf #WorldNews