சர்வதேச தொழிலாளர் விசா திட்டத்தில் இருந்து Microsoft, Adobe நிறுவங்களுக்கு அமெரிக்கா தடை
US Blocks Microsoft, Adobe from Visa Program 2026: திறமையான சர்வதேச தொழிலாளர்களை பணியமர்த்தும் திட்டத்தில் இருந்து Microsoft மற்றும் Adobe நிறுவங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
Microsoft, Adobe நிறுவங்களுக்கு அமெரிக்கா தடை
அமெரிக்க வெள்ளை மாளிகை, Microsoft, Adobe மற்றும் சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை திறமையான சர்வதேச தொழிலாளர்களை நியமிக்க உதவும் H-1B விசா திட்டம் மற்றும் PERM (Permanent Labor Certification Program) வழியாக பணியாளர்களை நியமிப்பதில் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance, அமெரிக்காவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் மற்றும் சில நிறுவனங்கள், அமெரிக்க தொழிலாளர்களுக்குப் பதிலாக "வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களை" பணியில் நியமித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க தொழிலாளர் செயலாளர் Keith Sonderling, “மைக்ரோசாஃப்ட் மற்றும் பல்கலைக்கழகங்கள் ‘விசா ஆலைகளாக’ மாறி, அமெரிக்காவை வெளிநாட்டு தொழிலாளர்களால் நிரப்புகின்றன” என்று தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட், “நாங்கள் அமெரிக்க தொழிலாளர்களுக்கு சமமான சம்பளத்தையே வெளிநாட்டு பணியாளர்களுக்கும் வழங்குகிறோம். கடந்த ஆண்டு H-1B விண்ணப்பங்களில் 80 சதவீதம் ஏற்கனவே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காகவே தாக்கல் செய்யப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவில் H-1B விசா எண்ணிக்கை ஆண்டுதோறும் 85,000-ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு 6,000 பணியாளர்களை நீக்கி, அதே நேரத்தில் 6,800 H-1B விண்ணப்பங்களை தாக்கல் செய்ததாக JD Vance குற்றஞ்சாட்டினார்.
இந்த நடவடிக்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |