ஜப்பான் விமான நிலையம் அருகே வெடித்த அமெரிக்க வெடிகுண்டு: 90 விமான சேவை ரத்து!
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா போட்ட குண்டு தற்போது ஜப்பான் விமான நிலையம் ஒன்றில் வெடித்து சிதறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு
புதன்கிழமை தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தின்(Miyபaki Airport) ஓடுபாதை அருகில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதுடன் கிட்டத்தட்ட 90 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
🌐 Breaking News: Explosion at Miyazaki Airport? ✈️💥
— Currently JAPAN (@Currently_JAPAN) October 2, 2024
This morning, an explosion was reportedly captured on the information camera at Miyazaki Airport at 7:58 AM, sending plumes of dust into the air.
The airport office has confirmed that a sinkhole was found on the taxiway… pic.twitter.com/LPwA0VKsPp
நிலத்திற்கு அடியில் புதைந்திருந்த இந்த குண்டு வெடித்ததில் ஓடுபாதை அருகே 7 மீட்டர் அளவிலான பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக ஜப்பான் போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்திய ஜப்பான்
இந்நிலையில் வெடிப்புக்கு காரணம் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா வீசிய குண்டு தான் என்று ஜப்பான் தரை பாதுகாப்பு படையை சேர்ந்த வெடிகுண்டு அகற்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
வெடிப்பு காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அருகில் ஒரு விமானம் டேக்-ஆஃப் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.
விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டுள்ள நிலையில், மேலும் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |