ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த பதுங்கு குழி வெடிகுண்டுகள் சீனாவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
எதிர்கொள்ள ஒரு வழி
Bunker-buster எனப்படும் இந்த வெடிகுண்டுகள் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்க அமெரிக்கா முன்பு பயன்படுத்தியது. அமெரிக்காவின் இந்தப் பதுங்கு குழி குண்டுகள் ஏவப்பட்ட பிறகு மெதுவான வேகத்தில் சென்று, வீரியம் மிகுந்த தாக்குதலை முன்னெடுக்கின்றன.
சீன விஞ்ஞானிகள் தற்போது இந்த அமெரிக்க bunker-buster தாக்குதல்களை எதிர்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர், இதற்கு எந்த அதிநவீன தொழில்நுட்பமும் தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

ரூ 77,000 கோடி சொத்து மதிப்பு... நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவர்: ரத்தன் டாடாவுடன் நெருங்கிய தொடர்பு
சீன ஜனாதிபதியும் விஞ்ஞானிகளின் விளக்கத்தை ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் GBU-57 எனப்படும் bunker-buster குண்டுகளைப் பயன்படுத்தி ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கிய போது அதை எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இல்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது இந்த குண்டுகளை எதிர்கொள்ளும் வழியை முன்மொழிந்த சீன விஞ்ஞானிகள், தாக்கப்படும் நாடு GBU-57 குண்டின் பலவீனமான புள்ளிகளைத் தாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Oerlikon GDF துப்பாக்கி
அதாவது குண்டின் முன்பக்க கவசம் தடிமனாக இருந்தாலும், அதன் எஃகு விளிம்புகள் ஒப்பீட்டளவில் மெல்லியவை - சில சென்டிமீற்றர் தடிமன் மட்டுமே - அதாவது ஒன்று அல்லது இரண்டு விமான எதிர்ப்பு குண்டுகளால் GBU-57 குண்டை ஊடுருவி செயலிழக்கச் செய்ய முடியும் என சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், சீனாவின் சொந்த தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் சுவிட்சர்லாந்து தயாரிப்பான Oerlikon GDF துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். குறித்த துப்பாக்கியானது ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த Oerlikon GDF துப்பாக்கியானது வெறும் இரண்டு நொடிகளில் 36 சுற்று தோட்டாக்களை உமிழக்கூடியது. அதாவது 1,200 மீற்றர் (0.7 மைல்) தூரத்தில், அதன் தாக்குதல் துல்லியம் என்பது 42 சதவீதத்தை அடைகிறது.
இப்படியான ஒரு முறையைப் பயன்படுத்தி அமெரிக்காவின் சக்திவாய்ந்த bunker-buster குண்டுகளை எதிர்கொள்ளலாம் என்றே சீன விஞ்ஞானிகள் குழு முன்மொழிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |