நாயை வாக்கிங் அழைத்து சென்ற பெண்ணை தாக்கிய முதலை
தெற்கு கரோலினாவில் நாயை நடை பயிற்சிக்கு அழைத்து சென்ற பெண் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.
முதலை தாக்கியதில் பெண் உயிரிழப்பு
69 வயதுடைய பெண் ஒருவர் தன்னுடைய செல்லப் பிராணியான நாயை நடை பயிற்சிக்கு அழைத்து சென்று இருந்த போது முதலை தாக்கியதில் உயிரிழந்தார்.
தெற்கு கரோலினாவில் உள்ள ஸ்பானிஷ் வெல்ஸ் சமூகத்தின் ஹில்டன் ஹெட் தீவில் சம்பந்தப்பட்ட பெண் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.
AP
கோல்ப் மைதானத்தின் எல்லையில், குளத்தின் விளிம்பில் உயிரிழந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை முதலை ஒன்று பாதுகாப்பது போல் தோன்றியது.
அத்துடன் உடலை மீட்கும் முயற்சியின் போது இடையூறாக முதலை இருந்ததை தொடர்ந்து, அது பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் பெண்ணின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டது.
CBS NEWS
பாதுகாப்பாக இருக்கும் பெண்ணின் நாய்
இந்த சம்பவத்தை தொடர்ந்து பியூஃபோர்ட் கவுண்டி ஷெரீப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஏஞ்சலா வியன்ஸ் வழங்கிய தகவலின் படி பெண்ணின் நாய் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்து பியூஃபோர்ட் கவுண்டி நடைபெறும் இரண்டாவது முதலை தாக்குதல் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |