பிரேசில் நாட்டில் காணாமல் போன அமெரிக்க நாட்டவர்: 2 வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
US Citizen Found dead in Brazil : பிரேசிலில் அமெரிக்க குடிமகன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க குடிமகன் சடலமாக மீட்பு
2021ம் ஆண்டு வேலைக்காக பிரேசில் நாட்டிற்கு குடிபெயர்ந்த அமெரிக்கா குடிமகனான தமீர் நடவ்(Tamir Nadav) கடந்த 2 வாரங்களுக்கு மேலாக காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் பிரேசிலின் மரிங்கா நகரில் தமிர் நடவ்(46) தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடப்பதும், கணினி, டிவி ஆகியவை இயங்கப்படியே இருப்பதையும் பார்த்தனர்.
மேலும் வீட்டில் இருந்த பூட்டப்பட்ட அறையில் தமிர் நடவ் உடலும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பண மோசடியும், பொலிஸார் விசாரணையும்

தமிர் நடவ்-யின் பணத்தை பறிக்கும் திட்டத்தில் அவருடன் முன்பு வசித்து வந்த ஒரு ஆணும், பெண்ணும் தான் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
அதே சமயம் தமீர் நடவ் உயிரிழந்த காலம் மற்றும் காரணத்தை கண்டறிய தீவிரமான விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பணத்திற்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.