உடனே இந்த நாடுகளிலிருந்து வெளியேறுங்கள்... குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளிலும் ரஷ்ய அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க குடிமக்களை தனிமைப்படுத்தி தடுத்து வைக்கலாம் என்ற புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளுடன், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு மீண்டும் புதிய பயண ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யா ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி அல்லது ரஷ்யா அல்லது பெலாரஸ் வழியாக சாலை மார்க்கமாக வெளியேறும் போது, உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவத்தால் அமெரிக்க குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகியுள்ளன என்று புதுப்பிக்கப்பட்ட உக்ரைனுக்கான பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாராக இருங்கள்... நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி
அமெரிக்க குடிமக்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு பயணம் செய்வதற்கு எதிராகவும் மற்றும் அவர்கள் அங்கு இருந்தால் விரைவில் வெளியேறுமாறு பயண ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.