அமெரிக்காவில் 300 அடி ஆழத்தில் விழுந்து காயமடைந்த நாய்: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட கடலோர காவல்படை
அமெரிக்காவில் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த நாயை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தவறி விழுந்த நாய்
அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் உள்ள மலை உச்சியில் சுற்றுலா பயணி ஒருவர் தன்னுடைய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் கால் தவறி 300 அடி ஆழம் கொண்ட பாறைகள் நிறைந்த கடலை ஒட்டிய பகுதியில் விழுந்துள்ளது.
An #update from the owner.
— USCGPacificNorthwest (@USCGPacificNW) June 15, 2023
After a visit to the emergency vet, the dog's owner reports that his pup is doing just fine! Thanks to the work of our great first responders in Astoria and Cannon Beach! https://t.co/OWkwTYl1o7
விரைந்த கடலோர காவல்படை
பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் அதிலிருந்து வெளியேற வழியில்லாமல் காயங்களுடன் நின்ற நாயை மீட்க கடலோர காவல்படையினர் விரைந்தனர்.
இறுதியில் ஹெலிகாப்டரின் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் காயமடைந்த நாயை பத்திரமாக கடலோர காவல்படையினர் மீட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |