அமெரிக்காவின் ஒற்றை முடிவு... அவசர அவசரமாக முக்கிய கூட்டத்தை கூட்டிய வடகொரியா
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தலைமையில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமெரிக்காவின் அதிரடியான நடவடிக்கையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
கிம் ஜோங் உன் தலைமையில் கூட்டம்
வடகொரியாவின் அதலபாதாளத்தில் இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் எதிரணியில் இருக்கும் அண்டை நாடுகளுடன் வளர்ந்து வரும் பதட்டங்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு உத்திகளை மதிப்பாய்வு செய்வது என கிம் ஜோங் உன் தலைமையில் இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக கூறியுள்ளனர்.
@AP
ஆனால் வடகொரியாவுக்கு எதிராக தங்கள் பலத்தை தெரிவிக்கும் பொருட்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அமெரிக்கா தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே தொடர்புடைய அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
கூட்டத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உத்திகள் தொடர்பிலேயே விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவாதிக்கப்பட்ட தலைப்பு தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வட கொரியா தனது கிழக்குக் கடற்பகுதியில் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை வீசிய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரிய துறைமுகமான புசானுக்கு யுஎஸ்எஸ் மிச்சிகன் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தது.
இது படையெடுக்கும் பயிற்சி
மட்டுமின்றி, அமெரிக்க மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்கள் சிறப்பு நடவடிக்கை மற்றும் கூட்டு போர் திறன்களை கூர்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன.
@reuters
ஆனால், இது படையெடுக்கும் பயிற்சி என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளதுடன் கண்டனம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, வட கொரியா தனது சொந்த ஆயுத பலத்தை அதிகரிக்க அமெரிக்கா-தென் கொரிய பயிற்சிகளை ஒரு சாக்காக பயன்படுத்தியது.
2022 அம் ஆண்டு பிறந்ததில் இருந்தே வடகொரியா இதுவரை 100 ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்துள்ளது என்றே கூறப்படுகிறது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் முன்னெடுக்கும் இந்த இடைவிடாத ஆயுத சோதனைகள் தான் அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக நிபுணர்க்ள் தரப்பு குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், அணு ஆயுத திட்டங்களால் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லைகள் மூடப்பட்டு, சீனா உடனான வணிகம் முடங்கியது உள்ளிட்டவையால் கடுமையான சூழலை வடகொரியா எதிர்கொள்வதாகவே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |