நடவடிக்கை எடுங்கள்... இஸ்ரேலுக்கு 30 நாட்கள் கெடு விதித்த வல்லரசு நாடு
காஸா பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுப்பதில் கடும் பாதிப்பு எற்பட்டுள்ளதை அடுத்து, முதல் முறையாக இஸ்ரேலுக்கு கெடு விதித்து அமெரிக்க நிர்வாகம் கடிதமெழுதியுள்ளது.
மொத்தமாக முடக்கிய இஸ்ரேல்
காஸாவில் மில்லியன் கணக்கான மக்கள் குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் என அடிப்படைத் தேவைகள் ஏதுமின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஸா பகுதிக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் மொத்தமாக முடக்கியுள்ளது.
அக்டோபர் மாதம் தொடக்கத்தில் ,இருந்தே இஸ்ரேல் இந்த கொடூர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனால், மக்கள் பசியால் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச சமூகத்தை கவலைகொள்ள வைத்த நிலையில், பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது ஒருவகையில் இனப்படுகொலை என்றும், ஹிட்லர் காலத்திலும் முன்னெடுக்கப்படாத கொடுஞ்செயல் என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் சீரழியும் காஸா மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்றும்,
உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க 30 நாட்கள் கெடு விதித்து அமெரிக்கா கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், நடவடிக்கை எடுக்க தவறினால் வெளிநாட்டு ராணுவ உதவிகளை நாடும் விதிகளை மீறிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தரப்பில் இருந்து விடுக்கப்படும் முதல் எச்சரிக்கை இதுவென்றே கூறப்படுகிறது. இஸ்ரேல் தரப்பில் கடிதம் குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேம்படுத்துவதற்கு நடவடிக்கை
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் திட்ட விவகாரங்கள் அமைச்சர் Ron Dermer ஆகியோருக்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Antony Blinken மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Lloyd Austin ஆகியோரால் ஞாயிறன்று கடிதம் அனுப்பப்பட்டதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Matthew Miller தெரிவித்துள்ளார்.
மேலும் பைடன் நிர்வாகம் இதுபோன்ற ஒரு அழுத்தத்தை கடிதம் வாயிலாக ஏப்ரல் மாதம் அளித்ததாகவும், இறுதியில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அனுப்பிய கடிதத்தில், இஸ்ரேல் ஒரு நாளைக்கு குறைந்தது 350 டிரக்குகளை நான்கு முதன்மை பாதைகள் வழியாகவும் காஸாவிற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும், அதே போல் ஐந்தாவது பாதையையும் திறக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கட்டுப்பாடுகள் ஏதுமின்றி மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கவும், தடுப்பூசி மற்றும் உதவிகள் முன்னெடுக்கவும் அடுத்த நான்கு மாதங்களுக்கு அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் இந்த வாய்ப்பை பயன்படுத்தும் என்றே மில்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |