ட்ரம்ப் விதித்த 10 சதவீத வரி சட்ட விரோதம்., அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவின் Court of International Trade (CIT) சமீபத்தில், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் விதித்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டப்படி தவறானவை என தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு, இரண்டு தனியார் நிறுவனங்கள் மற்றும் வாஷிங்டன் மாநிலத்திற்கு மட்டும் தற்காலிக நிவாரணம் அளிக்கிறது.
மற்ற அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் வரிகள் தொடரும். இந்த வரிகள் ஜூலை மாதத்தில் காலாவதியாகும் வரை அமுலில் இருக்கும்.
ட்ரம்ப் நிர்வாகம், 1974-ஆம் ஆண்டின் Trade Act சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் இந்த வரிகளை விதித்தது.

ஆனால், அமெரிக்கா “balance of payments deficit” எனும் நெருக்கடியை எதிர்கொள்வதாக ட்ரம்ப் கூறிய காரணம் தவறானது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இதனால், உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபடும் பல நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன. “இந்த சட்ட விரோத வரிகள் எங்கள் வளர்ச்சியை பாதித்தன. நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு தெளிவையும் நிலைத்தன்மையையும் அளிக்கிறது” என்று Basic Fun! நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜே ஃபோர்மன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், Section 301 சட்டத்தின் கீழ் புதிய நிரந்தர வரிகளை விதிக்க முயற்சிக்கிறது.
இந்த தீர்ப்பு, ட்ரம்ப் விதித்த உலகளாவிய வரி திட்டங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த சட்டப்போராட்டங்களையும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளையும் வர்த்தக உலகம் கவனித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |