அமெரிக்காவில் Remittance Tax 1 சதவீதமாக குறைப்பு: 2026-ல் அமுல்
அமெரிக்காவில் Remittance Tax 1 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த நிம்மதியை தரும் வகையில், 'One Big Beautiful Bill Act' என்ற மசோதாவின் புதிய வடிவத்தில் ரிமிட்டன்ஸ் (பணம் அனுப்பும் வரி) வரி 3.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27-ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க செனட் வரைவில், ரிமிட்டன்ஸ் வரி வங்கிகள் மற்றும் கார்டுகள் மூலம் அனுப்பப்படும் பணங்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேஷ், மணி ஆர்டர், கேஷியர் செக் போன்ற முறைகள் மூலமாக பணம் அனுப்பும் போது மட்டுமே இந்த 1% வரி விதிக்கப்படும் என Grant Thornton Bharat நிறுவனத்தின் அமெரிக்க வரிவிதிப்பு நிபுணர் லாயிட் பின்டோ கூறினார்.
அமெரிக்க வங்கிகள் அல்லது அங்குள்ள கார்டுகள் மூலம் பணம் அனுப்பும் NRI-க்கள், இந்த வரியிலிருந்து விலக்கப்படுவர்.
இந்த மசோதா 2025 டிசம்பர் 31-க்குப் பிறகு அமுலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க அரசின் புதிய வரி மற்றும் நிதிக் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த மாற்றம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பரவலான கவலையை குறைத்து, ரிமிட்டன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் சுமை குறைவாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |