10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம்
வெனிசுலா எல்லை நோக்கி 10 போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
வெனிசுலா அமெரிக்கா பதற்றம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுராவை போதைப்பொருள் பயங்கரவாதி என குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரை பிடிப்பதற்கு 50 மில்லியன் டொலர் வெகுமதி அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் வெனிசுலா கடல் எல்லை நோக்கி 3 ஏவுகணை எதிர்ப்பு போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 15,000 வீரர்களை வெனிசுலா எல்லையில் நிறுத்தினார் நிக்கோலஸ் மதுரா.
இந்நிலையில், வெனிசுலா கப்பல் ஒன்று அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்த முயன்றதாக கூறி, அந்த கப்பல் அமெரிக்கா போர் கப்பல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பல் மூழ்கியதில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
இதனையடுத்து, வெனிசுலாவின் போர் விமானங்கள் அமெரிக்கா கப்பலை அச்சுறுத்தும் நோக்கில் அதன் அருகே பறந்துள்ளதாகவும், இது தங்களுக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கை, இந்த நிலை தொடர்ந்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், வெனிசுலாவின் எல்லையில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ(Puerto Rico) பகுதிக்கு 10 F-35 போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எதிராக, நாட்டை பாதுகாக்க 8 மில்லியன் மக்களை திரட்டி வருவதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |