கிரீன்லாந்தில் இராணுவ விமானங்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா
அமெரிக்கா கிரீன்லாந்தில் இராணுவ விமானங்களை நிறுத்தியிருப்பது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா, ஆர்க்டிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் கிரீன்லாந்தில் இராணுவ விமானங்களை நிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி டொனால்டு ட்டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆர்க்டிக் பிராந்தியம், இயற்கை வளங்கள் மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக சக்திகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, எண்ணெய், எரிவாயு மற்றும் அரிய கனிமங்கள் நிறைந்துள்ளதால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இப்பகுதியில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயல்கின்றன.
ட்ரம்ப் அரசு, கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், அதற்கான முதல் படியாக இராணுவ விமானங்களை அங்கு நிறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நடவடிக்கை, டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஆர்க்டிக் பிராந்தியத்தில் புதிய புவியியல் அரசியல் பதற்றத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது.
டென்மார்க், கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி, நாட்டு பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவின் உதவியை நாடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ட்ரம்பின் இந்த முயற்சியை “ஆர்க்டிக் ஆக்கிரமிப்பு” என உலகளவில் விமர்சிக்கப்படுகிறது.
இது அமெரிக்கா-ஐரோப்பா உறவுகளில் புதிய சிக்கல்களை உருவாக்கும் என்றும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் சக்தி சமநிலையை மாற்றும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பது, உலக அரசியல் மேடையில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US military Greenland, Donald Trump Greenland plan, Arctic island acquisition, Greenland airbase deployment, Trump Arctic strategy, Denmark Greenland NATO, Arctic geopolitics news, Greenland US aircraft, Trump Greenland controversy, Arctic resources military