ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் - அமெரிக்க உளவுத்துறையின் அதிர்ச்சி தகவல்
அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை (DIA) வெளியிட்டுள்ள புதிய உளவுத்துறை மதிப்பீட்டில், ரஷ்யா அணுகுண்டுகளை பயன்படுத்தும் வாய்ப்பு குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
DIA வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் போரில் ரஷ்யா அணுகுண்டுகளை பயன்படுத்தும் சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. ஆனால், ரஷ்யா தலைமையகம் ‘அவர்களின் ஆட்சி அபாயத்தில் உள்ளது’ என நம்பினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.” என தெரிவித்துள்ளது.
புதிய அணு கொள்கையில் பெரும் மாற்றங்கள்
2025 ஏப்ரலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த புதிய அணு கொள்கை மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இதில், சாதாரண (conventional) தாக்குதலுக்கே அணு ஆயுத பதிலடி கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சாதாரண தாக்குதலில் அணு ஆயுதமுள்ள நாடு உடந்தையாக இருந்தால், அதை அணுத் தாக்குதலாகவே ரஷ்யா கருதி பதிலடி செய்யும்.
ரஷ்யாவின் இறையாட்சி மற்றும் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஆபத்து ஏற்பட்டால், அணுகுண்டு பயன்படுத்தலாம்.
வான் வழி தாக்குதல், குரூஸ் ஏவுகணை, ட்ரோன், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்ற பெருந்தொகையான ஒருங்கிணைந்த தாக்குதல் நடந்தால், அது அணுத் தாக்குதலுக்கு தகுந்த காரணமாக கருதப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia nuclear weapons threat, Putin new nuclear doctrine, US DIA Russia nuclear report, Russia existential threat nuclear, Ukraine war Russia nukes, Russia vs NATO nuclear policy, Vladimir Putin nuclear policy 2025, Golden Dome vs Russian nukes, Russia conventional attack response, Russia hypersonic retaliation