கடலில் கண்ணிவெடிகள்: ஈரானின் எச்சரிக்கை உண்மையில்லை: CENTCOM அறிவிப்பு
Us dismisses iran sea mine claims: ஹார்முஸ் நீரிணைப் பாதையில் கடல் கண்ணிவெடிகள் தொடர்பில் ஈரான் விடுத்த எச்சரிக்கைகளை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் விடுத்த எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையில் தங்கள் அனுமதியின்றி குறிப்பிட்ட மாற்றுப் பாதையில் பயணித்த வணிகக் கப்பல்கள் கண்ணி வெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டு இருப்பதாக ஈரான் முன்வைத்து வரும் எச்சரிக்கை கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் திட்டவட்ட மறுப்பு
X தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM) வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், மத்திய தரைக்கடல் பகுதியின் முக்கிய கடல் வழித் தடமான ஹார்முஸில் ஆபத்துகள் இருப்பதாக ஈரான் கூறும் கூற்றுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவிலான முதன்மை கப்பல் போக்குவரத்திற்கான கடல்வழி பாதைகள் அனைத்தும் கண்ணிவெடிகள் எதுவும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்துள்ளது.
இந்த சர்வதேச கடல் வழியை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கப்பல்கள் எந்தவொரு ஆபத்தும் இன்றி பயன்படுத்தியதாகவும், தற்போதும் கப்பல்கள் தொடர்ந்து இந்த வழியை பாதுகாப்பாக பயன்படுத்தி வருவதாகவும் CENTCOM தெரிவித்துள்ளது.