இங்கே வராதீர்கள்... காபூலில் உள்ள அமெரிக்கர்களுக்கு US தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
சாத்தியமான அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்கர்கள் காபூல் விமான நிலையத்தை தவிர்க்குமாறு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் உள்ள வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தற்போதைக்கு அமெரிக்க குடிமக்களுக்கு விமான நிலையத்திற்கு பயணம் செய்வதையும், விமான நிலைய வாயில்களுக்கு அருகே கூடுவதை தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
repatriation assistance படிவத்தை பூர்த்தி செய்யாத அமெரிக்கர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், முடிந்தவரை விரைவில் தங்களுக்கான படிவத்தை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொருத்தரும் தனித்தனியாக repatriation assistance படிவத்தை பூர்த்தி செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க குடிமக்கள் தங்கள் விமானங்கள் தொடர்பான விவரங்கள் பற்றி தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம்.
நிலைமை மாறிய பிறகு repatriation assistance படிவம் மூலம் பதிவு செய்த அமெரிக்க குடிமக்களை நாங்கள் தொடர்புகொள்வோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.