உக்ரைன் வான்வழியில் ரஷ்யாவின் பிரமாண்ட திட்டம்: எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகம்
உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது வான்வழித் தாக்குதல்
உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க நாட்டு குடிமக்களுக்கு உக்ரைனிய தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மிகத் தீவிரமான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை விரைவில் ரஷ்யா முன்னெடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கர்களிடம் அந்நாட்டு தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் வான்வழித் தாக்குதல் தொடர்பான சைரன்கள் அல்லது எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டால் உடனடியாக எந்தவொரு தாமதமும் இன்றி உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஓரேஷ்னிக் ஏவுகணை
சமீபத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-க்கு கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் ரஷ்யா தங்களது ஓரேஷ்னிக்(Oreshnik) ஏவுகணையை உக்ரைன் மீது வீசி தாக்குதல் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதிர் தரப்பின் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் வரும் போது அவசர கால சேவையினரால் காட்டப்படும் வழிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |